கரூர், செப். 18: கரூர், குளத்துப்பாளையம் பிரிவு அருகே வாகன போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு அருகே குளத்துப்பாளையம் பகுதிக்கான சாலை பிரிகிறது. இந்த பிரிவுச் சாலையோரம் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. மேலும், அதிகளவு குடியிருப்புகளும் உள்ளன.இதன் காரணமாக இந்த பகுதியில் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
மேலும், வாகனங்கள் இந்த பிரிவுச் சாலையை ஒட்டி குறுக்கே செல்வதால் மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாமல் அடிக்கடி சிறு விபத்துக்களும் நடைபெற்று வருகிறது. எனவே, குளத்துப்பாளையம் பிரிவு அருகே வாகனங்களின் போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல மாதங்களாக வைக்கப்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு, வாகனங்கள் எளிதாக செல்ல தேவையான ஏற்பாடுகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.