கரூர், ஆக. 18: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூரில் இலங்கை தமிழர் முகாம் உள்ளது. ஆயிரக்கணக்கானோர் இநத முகாமில் வசித்து வருகின்றனர். இவர்களின் நலனுக்காக மேல்நிலை தொட்டி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.இந்நிலையில், தொட்டி வளாகம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே, இந்த தொட்டி வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும்.
நீர்த்தேக்க தொட்டி அருகில் மரங்கள் வளர்ந்து காடுபோல் வளர்ந்துள்ளதால் மரங்களை வெட்டி அகற்றுவதுடன் வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த வளாக பகுதியை பார்வையிட்டு குடிநீர் தொட்டி வளாகத்திற்கு பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.