குளித்தலை, ஆக.18: கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு இந்தியா கூட்டணி கட்சி சார்பில் இந்திய தேர்தல் ஆணையம், பாஜக அரசை கண்டித்தும், மோடி பதவி விலக கோரியும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில பொது குழு உறுப்பினர் இன்ஜினியர் பிரபாகர் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி கரூர் மாவட்ட செயலாளர் ஜோதி பாசு, கரூர் மாவட்ட காங்கிரஸ் துணை செயலாளர் பொன்னுச்சாமி, குளித்தலை வட்டார காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி குளித்தலை தாலுகா செயலாளர் முத்து செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மத்தியிலாலும் பாஜக அரசை கண்டித்தும் தேர்தலில் தில்லு முல்லு செய்து மத்தியில் பாஜக ஆட்சி அமைவதற்கு தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேர்தல் ஆணையம் துணை போவதை கண்டித்தும்,
தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்து ஆட்சிக்கு வந்த பாஜக பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி, கண்டன உரை நிகழ்த்தினார்கள்,இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.