கரூர், அக். 17: இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மெஜஸ்டிக் லையன்ஸ் சங்கமும், தான்தோன்றி மலை மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு பற்றிய பேச்சுப்போட்டி நடைபெற்றது . போட்டியில் வீரர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி பள்ளித் தாளாளர் பேங்க் சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது.
சங்க ஆளுநர் மணிவண்ணன், மெஜஸ்டிக் லைன்ஸ் சங்க தலைவர் சிந்தன், வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார். சங்க செயலாளர் சிவக்குமார், வட்டாரத் தலைவர் ரமணன், திருக்குறள் பேரவை கரூர் மாவட்ட செயலாளர் மேலை பழனியப்பன், யோகா வையாபுரி மற்றும் பள்ளி முதல்வர் ஜெயசித்ரா, ஆசிரியர்கள் அழகம்மாள், ராஜலட்சுமி, தாரணி, பரிமளா, சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் ஆசிரியை ஸ்வர்னலதா நன்றி கூறினார்.