லாலாப்பேட்டை, அக். 17: லாலாபேட்டை ஏல கமிஷன் வண்டியில் வாழைத்தார்கள் விற்பனை செய்யப்படுகிறது. கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே கள்ளப்பள்ளி, சிந்தலவாடி மகாதானபுரம், மேட்டு மகாதானபுரம், வீரக்குமாரன்பட்டி, பிள்ளபாளையம் கே.பேட்டை, வீரவள்ளி, கருப்பத்தூர், கம்மநல்லூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி ரகங்கள் உட்பட பல்வேறு ரக வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.
நன்கு வளர்ந்து அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள் லாலாபேட்டை கமிஷன் மண்டியில் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு வாழைத்தாரர்களின் தரத்திற்கு ஏற்ப ஏலம் விடப்டும். நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரஸ்தாலி வாழைத்தார் ஒன்று ரூ.300 முதல் 350க்கும், பூவன் வாழைத்தார் ரூ.280 முதல் ரூ.300க்கும், கற்பூரவல்லி வாழைத்தார் ரூ.160 முதல் ரூ.200க்கும் விற்பனையானது. தற்போது சுபமுகூர்த்த நிகழ்ச்சிகள் ஏதும் இல்லாததால் வாழைத்தார்கள் சீரான விலையில் விற்பனையானது. உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த வியாபாரிகள் பலரும் வாங்கிச்சென்றனர்.