கரூர், செப். 17: கரூர் மாவட்டம் ஆத்தூர் பிரிவு அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கரூர் ஈரோடு சாலை ஆத்தூர் பிரிவு அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீசார்களுக்கு தகவல் வந்தது.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, இதே பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் என்பவர் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 150 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து, அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.