கரூர், செப். 16: கரூர் மாவட்டம் கோடங்கிப்பட்டி பகுதியில் இருந்து திண்டுக்கல், ஈசநத்தம் மற்றும் பாகநத்தம் போன்ற பகுதிகளுக்கான சாலை செல்கிறது.
இந்த சாலையில் பாகநத்தம் வரை அதிகளவு கிராம பகுதிகள் உள்ளன.ஆனால், இந்த சாலையில் ஆங்காங்கே குறிப்பிட்ட து£ரம் வரை கிராம பகுதிகளுக்கு பிரியும் இடத்தில் போதியளவு மின் வசதி மிகவும் குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக இரவு நேரங்களில் சாலை விபத்துக்கள் நடைபெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.எனவே, இதுபோன்ற விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் கரூர் பாகநத்தம் சாலையில் கிராம பகுதிகளுக்கு பிரியும் இடத்தில் கூடுதலாக மின் வசதி ஏற்படுத்த வேண்டும் என பகுதியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.