கிருஷ்ணராயபுரம், செப். 16: கிருஷ்ணராயபுரம் அருகே சிந்தலவாடி ஊராட்சி
யில் மகளிருக்கு இலவச சட்ட ஆலோசனை முகாம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம் கிரு ஷ்ணராயபுரம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக சிந்தலவாடி ஊராட்சியில் மகளிர்களுக்கு இலவச சட்ட ஆலோசனை முகாம் நடைபெற்றது. கிருஷ்ணராயபுரம் வட்ட சட்ட பணிகள் குழு வழக்கறிஞர் பிஎம் செந்தில்குமார் தலைமை வகித்தார். போக்குவரத்து விதிமுறைகள், போதைப்பொருள் ஒழிப்பு இலவச சட்ட மையம், குழந்தைகள் நல வாழ்வு, பெண்கள் பாதுகாப்பு போன்ற முக்கிய அம்சங்கள் பற்றி எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் வடிவேல் வட்ட சட்ட பணிகள்குழு தன்னார்வலர் கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் பங்குபெற்றனர்.