கிருஷ்ணராயபுரம், செப். 16: கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டையில் பள்ளி மாணவியை காதலிக்க சொல்லி மிரட்டிய வாலிபரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே தெற்கு கள்ளபள்ளி பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவி. இவரை கிருஷ்ணராயபுரம் தாலுக்கா பிள்ளபாளையம் பகுதியை சேர்ந்த சென்ட்ரிங் வேலை செய்து வரும் சந்தோஷ்குமார் (23) தினமும் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும்போதும் பின் தொடர்ந்து வருவது வழக்கமாம். சந்தோஷ்குமார், பள்ளி மாணவியை காதலிக்க சொல்லி கட்டாயப்படுத்தி மிரட்டி வந்துள்ளார்.இதுகுறித்து மாணவி தன் தாயிடம் கூறியுள்ளார்.இதுகுறித்து லாலாபேட்டை போலீசாரிடம் மாணவியின் தாய் புகார் கொடுத்தார். அதன்படி சந்தோஷ்குமார் மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்தனர்.