கரூர், செப்.15: சுக்காலியூர் ரவுண்டானாவில் இருந்து அரவக்குறிச்சி பிரிவு சாலையின் வளைவில் சேறும் சகதியுமாக உள்ளதால் இரவு நேரங்களில் வாகனங்கள் சறுக்கி விபத்துக்குள்ளாகின்றன. எனவே அதிகாரிகள் பார்வையிட்டு சரி செய்ய வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுக்காலியூர் மேம்பாலத்தை ஒட்டி, திண்டுக்கல், மதுரை மற்றும் அரவக்குறிச்சி போன்ற பகுதிகளுக்கு மேம்பாலம் செல்லும் சர்வீஸ் சாலை உள்ளது.இந்த பிரிவுச் சாலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக சேறும் சகதியுமாகி மிகவும் மோசமாக உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.எனவே, இந்த பிரிவுச் சாலையை பார்வையிட்டு வாகனங்கள் அனைத்தும் எளிதாக செல்லும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.துறை அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் சாலையை செப்பனிட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.