கரூர், ஆக. 15: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் அருகே குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைய முயன்ற 6 அடி நீள முள்ள பாம்மை இந்த பகுதியினர் பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் பகுதியில் இருந்து தெரசா கார்னர் செல்லும் சாலையோரம் சிறிய அளவிலான குடியிருப்பு இல்லாத பகுதி உள்ளது.
இந்நிலையில், நேற்று காலை 12 மணியளவில் அந்த பகுதியில் இருந்து அருகில் உள்ள குடியிருப்புகளை நோக்கி 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று அதிக வேகமாக சென்று கொண்டிருந்தது. இதனை பார்த்த இந்த பகுதியினர் மற்றவர்களுக்கு தகவல் அளித்தனர். இதன் காரணமாக விரைந்து வந்த பொதுமக்கள், அதிக வேகமாக குடியிருப்பை நோக்கி சென்ற பாம்பை கையால் பிடித்து மற்றொரு பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். 6 அடி நீளமுள்ள பாம்பு திடீரென குடியிருப்பை நோக்கி சென்ற சம்பவம் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.