குளித்தலை, அக்.14: தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் பருவ மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே தினந்தோறும் மழை பெய்து வந்தது. இந்நிலையில் குளித்தலை பகுதியில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வெயில் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர், இந்நிலையில் நேற்று மாலை திடீரென அரை மணி நேரம் கனமழை பெய்து. இதனால் சாலை ஓரங்களில் பெருக்கெடுத்த தண்ணீர் கடம்பர் கோவில் தனியார் மருத்துவமனை எதிரே சாலையில் தெப்பம் போல் தண்ணீர் தேங்கியது, இதில் அவ்வழியாக சென்ற பேருந்துகள் வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டவாறு ஊர்ந்தவாறு சென்றது.
அவ்வழியாக நடந்து சென்றோர் பள்ளம் மேடு தெரியாமல் அச்சத்துடன் சாலையை கடந்து சென்றனர். அதனால் கடம்பர் கோவில் தனியார் மருத்துவமனை அருகே மழைக்காலங்களில் நெடுஞ்சாலைகளில் தேங்கும் தண்ணீர் இனி வரும் காலங்களில் இல்லாத வகையில் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.