Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கரூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்க்கும் பணி

கரூர், நவ.13: கரூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகளை அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட கலெக்டர் தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் எதிர்வரும் சட்டமன்ற பொதுத் தேர்தல், 2026 நடைபெறு வதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கினை நேற்று (வெள்ளிக்கிழமை) கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தங்கவேல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டர்.

கரூர் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கரூர் கலெக்டர் அலுவகத்தில் நடைபெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி நடைபெறுதை முன்னிட்டு கடந்த செவ்வாய்கிழமை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடான கூட்டம் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்த்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பெங்களுரூ பெல் நிறுவன பொறியாளர்களால் முதல் நிலை சரிபார்ப்புபணி மேற்கொள்ளப்பட உள்ளது. முதல் நிலை சரிபார்ப்பு பணிக்கு உரிய முன்னேற்பாடுகளான வெப் காஸ்டிங், மெட்டல் டிடெக்டர் பொருத்துதல் சானிட்டசைர் செய்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டது.

முதல் நிலை சரிபார்ப்பு பணி நடைபெறும் தினங்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சார்பாக பிரமுகர் ஒருவரை பரிந்துரைக்கும்படியும், பரிந்துரைக்கப்படும் பிரமுகர் இப்பணி முடியும் நாட்கள் வரை காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை வைப்பறையில் ஆஜரில் இருக்கவும் தெரிவிக்கப்பட்டது. இப்பணியின் நிறைவாக அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் தவறாது மாதிரி வாக்கு பதிவு செய்திடவும், முதல் நிலை சரிபார்ப்பு பணியில் பழுதானது என கண்டறியப்படும் இயந்திரங்கள் பெங்களுரு பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், முதல் நிலை சரிபார்ப்பு பணிக்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரும் ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இதயைடுத்து பணிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெங்களூரை சேர்ந்த பாரத் எலக்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited) மென் நிறுவன பொறியாளர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள துறை சார்ந்த அலுவலர்களைக் கொண்டு சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கில் Ballot Unit 4855 பெலட் மெஷின்கள், 1486 கன்ரோல் யூனிட்கள் மற்றும் 1618 விவிபேட் என்ற எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியானது சுமார் ஒருமாத காலம் வரை மேற்கொள்ளப்படவுள்ளது. இவிம்களின் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு தொடர்பான விரிவான நடைமுறைகள், இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் https://www.eci.gov.in/evm-vvpat கிடைக்கக்கூடிய “Electronic Voting Machine Manual”-இல் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இந்த பணியில் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.