கரூர், அக். 13: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மக்கள் பாதையில் கனரக வாகன நிறுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்ககப்பட்டுள்ளது. கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் இருந்து பிஎஸ்என்எல் அலுவலகம், மார்க்கெட், மாரியம்மன் கோயில், ஜவஹர் பஜார் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் மக்கள் பாதையின் வழியாக செல்கின்றனர்.
இரண்டு வழிப் போக்குவரத்து நடைபெற்று வரும் மக்கள் பாதையோரம் அடிக்கடி கனரக வாகனங்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால் வாகன போக்குவரத்துக்கு பெரிதும் இடையூறாக இருந்து வருகிறது எனக் கூறப்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்கள் பாதையோரத்தில் கனரக வாகன நிறுத்தத்தை கண்காணித்து, தடுத்து நிறுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.