வேலாயுதம்பாளையம்,அக்.13: கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் காகித ஆலை செல்லும் சாலை உள்ள செக்கு மேடு பகுதியில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமில் சுகாதார நிலைய மருத்துவர் தலைமையில் செவிலியர் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் முகாமிற்கு வந்திருந்த முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள்,
குழந்தைகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலருக்கும் ரத்தம் எடுத்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு மற்றும் உடல் பரிசோதனை செய்து பிரஷர் அளவு குறித்து பரிசோதனை செய்தனர். அதேபோல் தலைவலி, காய்ச்சல் ,கால் வலி, கை வலி ,உடல் வலி, இடுப்பு வலி , கண் வலி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்து உரியவர்களுக்கு உரிய மருந்து ,மாத்திரைகளை வழங்கினார்கள்.