கரூர், செப். 13: கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் தொட்டியப்பட்டி துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு வண்ண மற்றும் வெண்மை நிற சீருடைகள் வழங்கப்பட்டது. ஒரு தனியார் நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் வண்ண மற்றும் வெண்மை நிற சீருடைகள் வழங்கப்பட்டன.
மேலும், இரண்டு ஸ்மார்ட் போர்டு நமக்கு நாமே திட்டத்தில் பெறும் வகையில் மாவட்ட கலெக்டருக்கு ரூ. 95 ஆயிரம் மதிப்பில் காசோலையும் வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்வில், எம்எல்ஏ இளங்கோ கலந்து கொண்டு, சீருடைகளை வழங்கிய நிறுவனத்தினர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார். விழாவில் பள்ளி தலைமையாசிரியர் மூர்த்தி, இடைநிலை ஆசிரியர்கள் ரேவதி, பிரபு மற்றும் பெற்றோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.