கரூர், செப். 13: கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் 10 பேர் நேற்று உடல்தானம் செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட நிர்வாகிகள் ஜோதிபாசு, தண்டபாணி, ஜீவானந்தம், சக்திவேல் உட்பட 10 பேர் சேர்ந்து உடல்தானம் கொடுப்பதற்கான ஆவணங்களை கல்லூரி முதல்வரிடம் வழங்கினர். இதில், கட்சி நிர்வாகிகள் உட்பட அனைத்து தரப்பினர்களும் கலந்து கொண்டனர்.
+
Advertisement