அரவக்குறிச்சி, செப். 12: அரவக்குறிச்சி வேலம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ரங்கராஜ் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் இருந்த மின்கம்பம் மிகவும் பழுதடைந்திருந்தது. மின் கம்பத்தின் நடுப்பகுதியில் சிமென்ட் தளம் பெயர்ந்து, வெறும் இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்தன. அந்த மின் கம்பம் எந்த நேரத்தில் உடைந்து விழுந்து அசம்பாவித சம்பவம் ஏற்படுத்துமோ என்ற அச்சத்திலேயே அந்தப்பகுதி மக்கள் வாழ்ந்துவந்தனர்.
இதுகுறித்து பலமுறை மின்வாரியத்துக்கு புகார்கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து கடந்த 5ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளிவந்திருந்தது. அதன்படி மின்வாரிய அதிகாரிகளின் உத்தரவுப்புப்படி மின் வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து சரி செய்தனர். தினகரன் செய்தி எதிரொலியாக மின் கம்பம் மாற்றியமைக்கப்பட்டத்தையடுத்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.