அரவக்குறிச்சி, செப். 12: அரவக்குறிச்சி பகுதியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சிய தங்கவேல் கூறியிருப்பதாவது: அரவக்குறிச்சி வட்டாரத்தில், லிங்கம நாயக்கன்பட்டி ஊராட்சிக்கு லிங்கம நாயக்கன்பட்டி பிக் பாஸ் மஹால், மண்மாரி புதுாரிலும், தோகைமலை வட்டாரத்தில், கல்லடை மற்றும் புத்துார் ஆகிய ஊராட்சிகளுக்கு கீழவெளியூர் சமுதாயக்கூடத்திலும், தாந்தோணி வட்டாரத்தில், மணவாடி ஊராட்சிக்கு மணவாடி எஸ்கேபி மஹாலிலும், க.பரமத்தி வட்டாரத்தில், அத்திப்பாளையம் மற்றும் முன்னுார் ஆகிய ஊராட்சிகளுக்கு முன்னுார் செல்லாண்டியம்மன் மண்டபத்திலும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இன்று நடைபெறவுள்ளது. இதில் மக்கள் தங்களது கோரிக்கைகளை மனு செய்து பயன்பெறலாமென மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
+
Advertisement