தோகைமலை, ஆக.11: தோகைமலை அருகே வெவ்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்ற பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், தோகைமலை அருகே கொசூர் ஊராட்சி நாதிப்பட்டியை சேர்ந்த சுப்பன் மனைவி மாணிக்கம்மாள் (50).
இவர் கொத்தமல்லிமேடு அருகே தனது வீட்டில் மதுபானங்களை விற்பனை செய்து வந்ததாகவும், இதேபோல் போத்துராவுத்தன்பட்டியை சேர்ந்த மாணிக்கம் மகன் குமார் (48) என்பவர் அதே பகுதியில் நடத்தி வரும் பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வருவதாகவும் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் தோகைமலை போலீசார் அந்த பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது மாணிக்கம்மாள் மற் றும் குமார் ஆகிய இருவரும் அனுமதியின்றி மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவ ர்களிடம் இருந்து தலா 26 மது பான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.