கரூர், அக். 10: கரூர் மாநகர பகுதிகளின் வழியாக செல்லும் பஸ்கள் அடையாளப்படுத்தப்பட்ட நிறுத்தங்களில் நின்று பயணிகளை ஏற்றி இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் மாநகர பகுதியில் இருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வாகன போக்குவரத்து உள்ளது. பெரும்பாலான வாகனங்கள் குறிப்பிட்ட தூரம் நகரப் பகுதிகளின் வழியாக செல்கிறது.இதே போல், பெரும்பாலான வாகனங்கள், ரத்தினம் சாலை, தெரசா கார்னர் போன்ற பகுதிகளின் வழியாக சென்று வருகிறது. இந்நிலையில், பேருநதுகள் குறிப்பிட்ட நிறுத்தங்களில் நின்று செல்லாமல், தேவையற்ற பகுதிகளில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதால் மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத சூழல் உள்ளது.எனவே, பஸ்கள் அனைத்தும் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் மட்டுமே நின்று செல்ல வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நிறுத்தங்களில் நின்று செல்ல தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.