கரூர், அக். 10: கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கரூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்கள் இனசுழற்சி மூலம் பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது தொடர்பான விவரங்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.விண்ணப்பிப்பவர்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் இணையதள வழியாக 10.10.2025 முதல் விண்ணப்பிக்கலாம். (இணையதள வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 09.11.2025.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
+
Advertisement