லாலாபேட்டை அக். 9: லாலாபேட்டை பகுதிகளில் மானாவரி பயிரான எள் செடிகள் நன்கு பூ பூத்து வளர்ந்துள்ளது. கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே பஞ்சப்பட்டி, பாப்பாக்காப்பட்டி, போத்துராவுத்தன்பட்டி, குள்ளம்பட்டி, கட்டாரிப்பட்டி, வயலூர், வரகூர், வீரியம்பாளையம் பகுதிகளில் விவசாயிகள் எள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நிலம் உழவு செய்யப்பட்டு எள் விதைகள் தூவப்பட்டது. கடந்த சில நாட்களாக லாலாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தற்போது எள் செடிகள் நன்கு வளர்ந்து பூ பூத்துள்ளது. இன்னும் 25 தினங்களுக்குள் எள் அறுவடை பணிகள் துவங்கும். இப்பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் எள் சாகுபடி செய்துள்ளனர்.
+
Advertisement