அரவக்குறிச்சி, அக்.9: சின்னதாராபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் கடந்த ஏழு நாட்களாக நடைபெற்றது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள சின்னதாராபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி சார்பில் நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாம் கடந்த 7 நாட்களாக நடைபெற்றது. இம்முகாமில் திட்ட அலுவலர் லீலாவதி தலைமையில் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள், ஆசிரியர்கள் இணைந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். முகாமையொட்டி நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் பள்ளி வளாக தூய்மை பணி, சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு, மரம் நடுதல், சமூக நீதி பற்றிய விழிப்புணர்வு, நூலகத்தின் அவசியம் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தல், மாணவிகளுக்கு பாதுகாப்பை கொடுக்கும் தற்காப்பு கலைகள் குறித்து விழிப்புணர்வு, உயர்கல்வி வழிகாட்டல்கள், முதியோர்களுக்கு எழுத படிக்க கற்றுக் கொடுத்தல் போன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டனர். கடந்த சனிக்கிழமையன்று இம்முகாமின் நிறைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைவுநாளில் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் லீலாவதி வரவேற்புரையாற்றினார். சின்னதாராபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கண்மணி நாட்டு நலப்பணி திட்டத்தின் சிறப்புகளையும், அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பயன்களையும் குறித்து விளக்கி கூறினார். மேலும் நாட்டு நலப்படுத்திட்ட மாணவிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
+
Advertisement