கரூர், செப். 9: கரூர் வாங்கல் சாலை அரசு காலனி அருகே சாலையோரம் குப்பைகள் தீயிட்டு எரிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். கரூர் வாங்கல் சாலையில் அரசு காலனி பகுதியை தாண்டியதும் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இந்த கிடங்கிற்கு முன்னதாக அரசு காலனி பகுதியை தாண்டியதும் இந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் கடந்த பல மாதங்களாகவே சாலையோரமே கொட்டப்பட்டு வருகிறது.அவ்வாறு கொட்டப்படும் குப்பைகள், சில சமயங்களில் சாலையோரமே தீயிட்டு எரிக்கப்படுகிறது.
இதன் காரணமாக புகை அதிகளவு சாலையில் பரவி வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது.இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பல்வேறு தொந்தரவுக்கு ஆளாகி வருகின்றனர். இதுபோன்ற சூழல் இந்த பகுதியில் அடிக்கடி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையோரம் குப்பைகள் தீயிட்டு கொளுத்தும் நிகழ்வை துறை அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.