கரூர், செப். 9: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர்-கோவை சாலையில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தமிழரசன் கலந்து கொண்டு பேசினார். இதில, அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
எந்த பணி வரன் முறையின்றி கேங்மேன் பணியாளர்களை அனைத்து பணிகளிலும் ஈடுபடுத்துவதை நிறுத்த வேண்டும். ஐந்தாண்டு காலம் வாரியத்திற்காகவும், அரசின் நற்பெயருக்காகவும் உழைத்த கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளராக அறிவித்திட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.