கடவூர், அக். 8: மதுபானங்களை பதுக்கி விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கல்லடை ஊராட்சி கல்லடை மெய்காப்பன். இவரது மகன் முத்து(எ)முத்துச்சாமி (67). இவர் அதே பகுதியில் உள்ள தனது வீட்டின் பின்புறம் மதுபானங்களை விற்பனை செய்ததாக தெரிகிறது. தகவலறிந்த தோகைமலை போலீசார் விரைந்து சென்று விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்த 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தோகைமலை போலீசார், முத்துச்சாமி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைதுசெய்தனர்.
+
Advertisement