கிருஷ்ணராயபுரம், அக். 8: கிருஷ்ணராயபுரம் அடுத்த வெள்ளப்பட்டி ஊராட்சியில் சாலை ஓரங்களில் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பின் கரூர் கோட்டம், கிருஷ்ணராயபுரம் உட்கோட்டம், மற்றும் பிரிவு, வெள்ளப்பட்டி ஊராட்சி பள்ளத்துப்பட்டி கிராமம் பேருந்து நிறுத்தம் அருகில் மாவட்ட முக்கிய சாலையான மகாதானபுரம் -மைலம்பட்டி சாலை(வழி) பழைய ஜெயங்கொண்டம், பஞ்சப்பட்டி சாலை கி.மீ. 23/4ல் கோட்டப்பொறியாளர் ரவிக்குமார் அறிவுரைப்படி உதவிக் கோட்டப் பொறியாளர் கர்ணன், உதவிப் பொறியாளர் அசாருதீன் உத்தரவின் பேரில் திறன்மிகு உதவியாளர் கண்ணதாசன் மேற்பார்வையில் சாலைப்பணியாளர்கள் சாலையின் ஓரங்களில் மரக் கன்றுகள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
+
Advertisement