கரூர், அக். 8: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கரூர் மண்டலம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. கரூர் கோவை சாலையில் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்புள்ள தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளை தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் செல்வக்குமார், அழகேசன், முருகேசன், நெடுமாறன், சவுந்திரராஜன், சரவணக்குமார், கந்தசாமி உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசினர். கரூர் கிளை பொருளாளர் ஈஸ்வரன் நன்றி கூறினார். கேங்மேன் பணியாளர்களுககு உதவியாளர் பணி வழங்கிட வேண்டும்.
கேங்மேன் பணியாளர்களுக்கு சொந்த மாவட்டத்திற்கு செல்ல ஊர் மாற்றம் உத்தரவு 100 சதவீதம் வழங்கிட வேண்டும். இவர்களுககு உள்முகத் தேர்வில் வாய்ப்புகள் வழங்கிட வேண்டும், விடுபட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அமைப்பின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.