கரூர், நவ. 7: காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதமான சூழ்நிலையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கரூர் மாவட்டம் முழுதும் மழைக்கு பதிலாக சுட்டெரிக்கும் வெயில் மட்டுமே வாட்டி வதக்கி வந்தது.
இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவியதால் அனைத்து தரப்பினர்களும் சந்தோஷமடைந்தனர். இருப்பினும் ஆண்டு சராசரி மழையை கரூர்மாவட்டம் பெற மேலும் கூடுதலாக மழை பெய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அனனவரும் உள்ளனர். எனவே, இனி உள்ள (டிசம்பர் வரை) கரூர் மாவட்ட அதிகளவு மழையை பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
