கிருஷ்ணராயபுரம், அக்.7: கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளுக்கு ரூ.35 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் 14 பேட்டரி வண்டிகளை எம்எல்ஏ மாணிக்கம், வழங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) பகுதி-2 திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிந்தலவாடி,வயலூர்,கொசூர், தொண்டமாங்கினம், மத்தகிரி ஊராட்சிகளுக்கு ரூ.35 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் 14 பேட்டரி வண்டிகளை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் வழங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் பிடிஓ தங்கராஜ் (நிர்வாகம்) முருகேசன்(ஊராட்சி) தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் கரிகாலன் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் கதிரவன், கள்ளபள்ளி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சக்திவேல், யூனியன் மேனேஜர் பிரசாத், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால், ஊராட்சி செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.