கடவூர், அக். 7: தரகம்பட்டி அருகே கீழப்பகுதி ஊராட்சி சங்கிபூசாரியூர் சேர்ந்த செந்தில்குமார் (45). இவர் வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். மைலம்பட்டி தரகம்பட்டி ரோட்டில் தணியார் திருமண மண்டபம் அருகே அதே ஊரைச் சேர்ந்த திருப்பதி (39). என்பவர் ஜேசிபி இயந்திரத்தை ஓட்டி வந்து உள்ளார். அப்போது எதிர்பாராமல் செந்தில்குமாரின் இருசக்கர வாகனம் மீது ஜேசிபி மோதிய விபத்தில் செந்தில்குமாருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
+
Advertisement