முசிறி, நவ. 6: திருச்சி மாவட்டம், முசிறி அருகே மனைவி இறந்த துயரம் தாங்காமல் இருந்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முசிறி அருகே வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன்(60). இவரது மனைவி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கேன்சர் நோய் காரணமாக இறந்து போனார்.
இந்நிலையில் மனைவி இறந்த துயரம் தாங்காமல் விரக்தியும் வேதனையுடன் காணப்பட்ட குணசேகரன் நேற்று முன்தினம் தற்கொலை செய்துவதற்காக தனக்குத்தானே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டும் அதற்கு முன்னதாக விஷம் அருந்தியும் உள்ளார். உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதல் உதவி சிகிச்சைக்கு பின் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். திருச்சி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
