கரூர், நவ. 6: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அரசு காலனி பிரிவு அருகே வாகன ஓட்டிகளின் நலன் கருதி உயர் கோபுர மின் விளக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூரில் இருந்து வாங்கல், மோகனூர், அரசு காலனி, நெருர் சோமூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் அரசு காலனி பிரிவு வழியாக சென்று பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
இந்நிலையில், மூன்று வழிப் போக்குவரத்து நடைபெறும் இந்த சந்திப்பு பகுதியில் மினி ரவுண்டானா மற்றும் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என இந்த பகுதியினர் பல முறை கோரிக்கை வைத்து வந்தனர். இதன் பயனாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலைகள் பிரியும் இடத்தில் மினி ரவுண்டானா அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டிருந்தது. இதன் பயனாக, பலனாக நேற்று காலை மினி ரவுண்டானவை மையப்படுத்தி உயர் கோபுர மின் விளக்கு அமைக்கும் வகையில் பள்ளம் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
