கரூர், ஆக. 6: கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (கும்பகோணம்) கருர் மண்டல தொழிலாளர் சங்கம் சார்பில் வாயிற் கூட்டம் நடைபெற்றது. கரூர் மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த வாயிற் கூட்டத்திற்கு மண்டல தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மாநில சம்மேளன துணைத்தலைவர் ராஜேந்திரன், கரூர் மண்டல பொதுச் செயலாளர் விஜயகுமார், பொருளாளர் சக்திவேல், நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்குமார், துணைத்தலைவர் பூபதி, துணை செயலாளர் கனகராஜ் உட்பட அனை த்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசினர்.
மின்சார பேருந்து, மினி பேருந்து மற்றும் பணிமனைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். காலியாக உள்ள 30 ஆயிரம் பணியிடங்களை வேலை வாய்ப்பகம் மூலம் நிரப்ப வேண்டும். பணியில் இருந்து ஒய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு டிஏ உயர்வை முழுவதுமாக வழங்க வேண்டும், ஜூனியர் தொழிலாளர்களை விட குறைந்த ஊதியம் பெறும் சீனியர் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற்கூட்டம் நடைபெற்றது.