கரூர், ஆக 6: கரூர் மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தின் கரூர் துணைப் பயிற்சி நிலையத்தில் 2025-2026 ஆண்டுக்கான 2வது முழுநேர கூட்டுறவு பட்டயப் பயிற்சியை கரூர் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் செல்வி, கா.சுபாஷினி, குளித்தலை சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் திருமதி.திருமதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி பட்டயப்பயிற்சியை துவக்கிவைத்தன்ர்.
பயிற்சியாளர்களுக்கு பயிற்சி கையேடுகளை வழங்கியும் கூட்டுறவு பட்டயப்பயிற்சி பெறுவதால் கிடைக்கக்கூடிய பயன்கள் குறித்தும் தெளிவாக எடுத்துக்கூறினார்கள். அருகில் கூட்டுறவு சார் பதிவாளர் திரு. ஆசைத்தம்பி, கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் திரு.மு.அன்பரசன் பயிற்சி நிலையத்தின் பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.