கரூர், ஆக. 6: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க கரூர் மாவட்டக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கருர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பாலன் தலைமை வகித்தார்.
சிபிஐ முன்னாள் மாவட்ட நிர்வாகி ரத்தினம், சிபிஐ மாவட்ட செயலாளர் கலாராணி, மாவட்டக்குழு நிர்வாகி நேதாஜி, நகரச் செயலாளர் கார்த்திக்கேயன், மாநில குழு நிர்வாகி தங்கவேல், ஏஐடியூசி நிர்வாகி வடிவேலன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசினர். தமிழகத்தில் தொடரும் ஆணவப் படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும், அதனை தடுத்து நிறுத்த சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்த அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.