கிருஷ்ணராயபுரம், நவ. 5: கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பில் மகாதானபுரம் முதல் மைலம்பட்டி வரை செல்லும் சாலையில் வேலாயுதம்பாளையம் பகுதியில் சாலை விரிவாக்கம் பணி நடைபெறுகிறது. நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பில் கரூர் மாவட்டம் மற்றும் கோட்டம், கிருஷ்ணராயபுரம் உட்கோட்டம், மற்றும் பிரிவு மாவட்ட முக்கிய சாலையான மகாதானபுரம் முதல் மைலம்பட்டி வரை செல்லும் சாலையில் வேலாயுதம்பாளையம் அருகில் கிமீ. 23/4 25/0 வரை மிகவும் குறுகிய சாலையாக இருப்பதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
எனவே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக நெடுஞ்சாலைத்துறைச் சார்பில் 2025-26 ஆம் நிதியாண்டிற்கான ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இடை வழித்தடத்திலிருந்து (5.30 மீட்டர்) இரு வழித்தடமாக (7.00 மீட்டர்) அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் பணியானது தொடங்கி ஜெசிபி இயந்திரம் மூலம் சாலை அகலப்படுத்தும் வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதனை கிருஷ்ணராயபுரம் உட்கோட்டம் உதவிக்கோட்ட பொறியாளர் கர்ணன், மற்றும் உதவிப்பொறியாளர்கள் அசாருதீன் ஆய்வு செய்தனர். உதவியாளர் கண்ணதாசன் உடன் இருந்தனர்.
