கரூர். நவ. 5: கரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து விதிகள் மீறுவதால் பொதுமக்கள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. கரூர் காமராஜர் மார்க்கெட் பகுதி கரூரில் உள்ள முக்கிய பகுதிகளில் உண்டாகும் இப்பகுதியின் மிக அருகாமையில் கரூர் ரயில்வே ஜங்ஷன் உள்ளது. மேலும் கரூரிலிருந்து வாங்கல் நெரூர், திருமக்கூடலூர், மோகனூர் ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் மினி பஸ் வழியாக காந்திகிராமம் பசுபதிபாளையம் ஆகிய செல்லும் பேருந்துகளும் இந்த காமராஜ் மார்க்கெட் வழியாக பயணிப்பது வழக்கம்.
காமராஜ் மார்க்கெட் அருகில் ஆட்டோ ஸ்டாப், சரக்கு லோடு ஆகிய வாகனங்கள் மற்றும் மார்க்கெட்டுக்கு வரும் பிற வாகனங்களும் முறையாக விதிமுறைகளை கடைபிடிக்காததால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடியும், பொதுமக்கள் மீது வாகனம் மோதுவதால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகளிடம் எடுத்துக் கூறினால் ஒருவருக்கொருவர் தகராறு ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து அதிகாரிகள் தலையிட்டு ஒழுங்கு செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
