கிருஷ்ணராயபுரம், நவ 5: கிருஷ்ணராயபுரம் வட்டார பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கீட்டு படிவத்தை வீடு வீடாக சென்று வழங்குவதை டிஆர்ஓ விமல்ராஜ் நேரில் ஆய்வு செய்தார். கரூர் மாவட்டம் 136 கிருஷ்ணராயபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் சிறப்பு தீவிர திருத்தம்-2026, கணக்கீட்டு படிவம் நேற்று முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மூலம் வாக்காளர்களுக்கு வீடு வீடாக விநியோகிக்கப்பட்டது.
இதில் கிருஷ்ணராயபுரம் வடக்கு கிராமம் மற்றும் மாயனூர் கிராமத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கீட்டு படிவம் வீடு வீடாக வழங்கப்பட்டது. இதை மாவட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜ் நேரில் ஆய்வுசெய்தார். அருகில் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் விஜயா, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சித்ரா, வருவாய் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
