அரவக்குறிச்சி, நவ. 1: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே வீட்டுக்குள் நாகப்பாம்பு புகுந்தது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி டிஎம்எச் பகுதியில் ஷபான் என்பவரின் வீட்டில் திடீரென சுமார் 7 அடி நீளமுடைய நாகப்பாம்பு நுழைந்தது. வீட்டினுள் பாம்பு நுழைந்ததை கண்டு குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்தது. ஷபான் தன்னுடைய துணிச்சலுடன் பாம்பை வீட்டிலிருந்து வெளியே விரட்டினார்.
ஆனால் பாம்பு வெளியே சென்று அங்கிருந்த வீட்டின் கழிவுநீர் வாய்க்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அப்பகுதி பாம்புபிடி வீரர் மன்சூர், சம்பவ இடத்துக்கு விரிந்து வந்து, பல நிமிடங்களுக்குப் பிறகு மிகுந்த நுட்பத்துடன் பாம்பை பிடித்தார். பின்னர், அந்த நாகப்பாம்பை பத்திரமாக அருகிலுள்ள காட்டுப்பகுதியில் விட்டுவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
