க.பரமத்தி, நவ. 1: க.பரமத்தி அருகே கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். க.பரமத்தி அடுத்த பவித்திரம் ஊராட்சி சுற்று பகுதியில் அனுமதியின்றி மது விற்கப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் க.பரமத்தி எஸ்ஐ சந்திரசேகரன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது பெரியதாதம்பாளையத்தை சேர்ந்த சின்னதம்பி மகன் நேதாஜி(எ)அன்பழகன்(48) என்பவர் வீடு அருகே அதே பகுதியில் மது விற்பனைக்காக 27பாட்டில்கள் பதுக்கியது கண்டறியப்பட்டது. இதே போல சின்னதாதம்பாளையத்தை சேர்ந்த ராமசாமி மகன் சாமுவேல்(77) என்பவர் அதே பகுதியில் மது விற்பனைக்காக 27பாட்டில்கள் பதுக்கியது கண்டறியப்பட்டது. மேற்கண்ட இருவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்ததனர். க.பரமத்தி போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரிக்கின்றனர்.
