கரூர், அக். 25: நெகிழி கழிவுகள் இன்று சேகரிக்கப்படுவதாக கஎல்க்டர் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசு ஒருமுறை பயன்படுத்தும் (பிளாஸ்டிக்) நெகிழியை ஒழிப்பதிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதிலும் முன்னிலை வகித்து வருகிறது. அதன் பொருட்டு அரசு பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் நிகழ்வினை 2025ம் ஆண்டு முழுவதும் மாதங்களின் 4-வது சனிக்கிழமைகளில் நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து நம் மாவட்டத்தில் இன்று நெகிழி கழிவு சேகரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் நிகழ்வானது கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வழிபாட்டுதலங்கள், மற்றும் சந்தை வளாகங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் கழிவு பொருட்களை சேகரித்தல் மற்றும் நெகிழி குறித்த விழிப்புணர்வை பெற்று தம் அன்றாட வாழ்வில் நெகிழி புறக்கணிப்பை அங்கமாக்கி நெகிழி இல்லா தமிழகத்தை முன்னெடுத்து செல்வதில் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவிக்கிறார்.
