கடவூர் டிச. 5: கடவூர் வட்டம் தொண்டமாங்கிணம் கிராமத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிசுயம்பீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சிறப்பு பிரதோச வழிபாடு நடந்தது. முன்னதாக ஆதிசுயம்பீஸ்வரர் முன்பாக உள்ள நந்தீஸ் வருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, மஞ்சள், கரும்புச்சாறு உள்பட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் கோவில் முன்பாக சிறு யாககுண்டம் அமைக்கப்பட்டு பல்வேறு வகையான பூஜைகள் செய்தனர். இதில் உலக அமைதி வேண்டுதல்இ குழந்தைகள் வரம் தொழில்கள் சிறக்க வேண்டும். பருவமழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என்று பல்வேறு சிறப்பு யாகம் நடத்தி ஆதிசுயம்பீஸ்வரரை வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

