கரூர், ஆக. 4: கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடுமையாக வெயில் வாட்டி வந்த நிலையில், கனமழை சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காலநிலை நிலவுகிறது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கரூர் நகரம், வெங்கமேடு, தாந்தோன்றிமலை, காந்திகிராமம் , உள்ளிட்ட இடங்களிலும், மண்மங்களம், புலியூர், புன்னம்சத்திரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை விட்டு விட்டு பெய்தது. இருப்பினும் கரூரில் பெய்த மழை அளவு சுமார் 10 மில்லி மீட்டர் இருக்கும். இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.