குளித்தலை, ஆக. 3: இன்று ஆடி 18ட்டை முன்னிட்டு நாட்டுக்கோழிகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் வாரந்தோறும் சனிக்கிழமை நாட்டுக்கோழி சந்தை நடைபெறுவது வழக்கம், நேற்று திருச்சி, கரூர், திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் நாட்டுக்கோழிகள் மற்றும் பண்ணை கோழிகளை...
குளித்தலை, ஆக. 3: இன்று ஆடி 18ட்டை முன்னிட்டு நாட்டுக்கோழிகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் வாரந்தோறும் சனிக்கிழமை நாட்டுக்கோழி சந்தை நடைபெறுவது வழக்கம், நேற்று திருச்சி, கரூர், திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் நாட்டுக்கோழிகள் மற்றும் பண்ணை கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இன்று ஆடி 18 திருநாளை முன்னிட்டு கோழிகள் வாங்க ஏராளமான மக்கள் குவிந்தனர். நாட்டுக்கோழி ஒரு கிலோவிற்கு ரூ.450க்கு மட்டுமே விற்கப்பட்டது, அதேபோல பண்ணை கோழிகள் கிலோவிற்கு ரூ. 350க்கு விற்கப்பட்டது. ஆடி திருநாளை முன்னிட்டு அதிகமான வியாபாரிகள் கோழிகளை சந்தைக்கு கொண்டு வந்ததால் கோழிகள் விற்பனை அதிக விலை போகாமல் கணிசமான விலையிலேயே சந்தையில் விற்கப்பட்டது, கடந்த வாரம் ரூ.600 வரை விற்கப்பட்டதால் வியாபாரிகள் நேற்று ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் பொதுமக்கள் கணிசமான விலையில் விற்றதால் மகிழ்ச்சியுடன் மக்கள் வாங்கிச்சென்றனர்.