கரூர், செப்.2: கருர் வெங்கமேடு அருகே பதுக்கி வைத்திருந்த 1050 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையினர் பறிமுதல் செய்தனர். கரூர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் தலைமையிலான குழுவினர், வெங்கமேடு பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்டதோடு, இவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வாங்கப்பாளையம் ஒட்டபிள்ளையார் கோவிலுக்கு பின்புறம் கண்காணித்தனர். அப்போது, இரண்டு சக்கர வாகனத்தில் ரேஷன் அரிசியை கடத்தி வந்து பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனடிப்படையில, கரூர் வெங்கமேட்டை சேர்ந்த மோகன்குமார் என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 1050 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
+
Advertisement