கிருஷ்ணராயபுரம், செப்.30: கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் மத்திய அரசின் பாரத பிரதமர் சுவாமி நிதி லுக் கல்யாண் மேளா என்னும் திட்டத்தின்கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணன் (பொ) தலைமையில் நடைபெற்றது. கிருஷ்ணராயபுரம் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் மற்றும் பேங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சாலையோர வியாபாரிகள் தங்களுக்கு மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர். அவர்களுக்கு வங்கி மேலாளர்கள் மானியத்துடன் கடன் வழங்கும் திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர்.இதில் சாலையோர வியாபாரிகள் பேரூராட்சி பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement