லாலாப்பேட்டை, அக். 29: லாலாபேட்டை அருகே சட்ட விரோதமாக மது விற்றவரை கைது செய்து, அவரிடமிருந்த 26 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டம், லாலாபேட்டை காவல் நிலைய பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, லாலாபேட்டை மேம்பாலம் கீழ்பகுதியில் மேலவிட்டுக்கட்டியை வைரப் பெருமாள் மகன் கிருஷ்ணமூர்த்தி(36) என்பவர் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்தார். இதை கண்ட போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து, கைது செய்து வழக்குப் பதிவு செய்து, அவரிடமிருந்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement
