கரூர், அக். 26: ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பில் ஒப்புதல் அடிப்படையில் கரூர் மாவட்ட தலைவர் பாலுசாமி தெரிவித்திருப்பது:தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ. 10 ஆயிரமாக உயர்த்தவேண்டும். மக்கள் நலப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தை தற்போது காலமுறை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம் ரூ. 15 ஆயிரம் வழங்கவேண்டும்.காலவரையற்ற வேலை நிறுத்தம் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றிய பதிவறை எழுத்தருக்கு பொருந்தும் அனைத்து சலுகைகளும் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 29-ந்தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்பு, மறியல் போராட்டம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து நவம்பர் 24-ந் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற உள்ளது என்றார்.
